விளையாட்டு

நியூசிலாந்துக்கு அதிர்ச்சியளித்த பங்களாதேஸ்


சம்பியன்ஸ் கிண்ண லீக் சுற்றில் நியூசிலாந்து அணிக்கு பங்களாதேஸ்அணி அதிர்ச்சியளித்துள்ளது. பலம்பொருந்திய நியூசிலாந்து அணி, பங்களாதேஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளது.

இங்கிலாந்தின் கார்டிப்பில் நேற்றைய தினம் நடைபெற்ற  போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. ,தன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை 265 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் ரோஸ் டெய்லர் 63 ஓட்டங்களையும் கேன் வில்லியம்ஸன் 57 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் Mosaddek Hossain  மூன்று விக்கட்டுகளையும் Taskin Ahmed ,ரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி ஆரம்பத்தில் விக்கட்டுகளை இழந்தாலும், சகிபுல் ஹசன் மற்றும் முஹமதுல்லா ஆகியோரின் சாதனை இணைப்பாட்டத்தின் மூலம் வெற்றியை எட்டியது.

பங்களாதேஸ் அணி 47.2 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை ,ழந்து 268 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ,தில் சகிபுல் ஹசன் 114 ஓட்டங்களையும் முஹமதுல்லா ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். சகிபுல் – முஹமதுல்லா ஜோடி 224 ஓட்டங்களை ,ணைப்பாட்டமாக  பெற்றுக் கொண்டிருந்தது. பந்து வீச்சில் ரிம் சவுத்தி மூன்று விக்கட்டுகளை எடுத்திருந்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply