ஜெர்மனியில் தேர்தலை இலக்கு வைத்து ஊடகங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. ஜெர்மனியின் தேர்தல் பணிப்பாளர் Dieter Sarreither இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
பிரான்ஸில் தேர்தலுக்கு முன்னைய நாளில் இவ்வாறு ஊடகங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஊடகங்களில் எதிர்வு கூறல்களை வெளியிடுவது தேர்தலை பாதிக்கும் எனவும் இதனால் ஊடகங்களில் எதிர்வு கூறல்களை வெளியிடுவது தடை செய்யப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஜெர்மனிய தேர்தல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Add Comment