உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறைத் திணைக்களத்தில் கடமையாற்றி வருவதாக இலங்கை மோட்டார் சைக்கிள் பேரவை தெரிவித்துள்ளது.
கடமையில் ஈடுபட்டிருக்கும் போது அதிகளவில் கோபம் கொள்ளும் காவல்துறை உத்தியோகத்தர்கள் அடிக்கடி உளவியல் ரீதியான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென கோரியுள்ளது.
சில காவல்துறை உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்த காவல்துறையினருக்கே களங்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காவல்துறையினருக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக காவல்துறைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
Add Comment