இந்தியாவில் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்த கர்நாடக இளைஞரை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தினைச் சேர்ந்த 30 வயதான முகமது ஷபி அர்மர் என்பவர் இந்தியாவில் ஐ.எஸ்.இயக்கத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி உட்பட பர இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக இவர் உள்பட 6 பேர் மீது இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் முகமது ஷபி அர்மர், தன் சகோதரருடன் பாகிஸ்தானுக்கு சென்று தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தனது சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் அர்மரின் பெயரை அமெரிக்கா சேர்த்துள்ளது.
Spread the love
Add Comment