குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த இரண்டு நாடுகளும் பூரண டெஸ்ட் அந்தஸ்துள்ள உலகில் டெஸ்ட் கிரிக்கட் விளையாடும் நாடுகளின் வரிசையில் இணைந்து கொண்டுள்ளன.
டெஸ்ட் கிரிக்கட் அந்தஸ்து பெற்றுக் கொள்ளும் உலகின் 11ம் மற்றும் 12ம் நாடுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளன.
லண்டனில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் போது இரண்டு நாடுகளுக்கும் டெஸ்ட் கிரிக்கட் அந்தஸ்து வழங்கும் ஆவணத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் டெஸ்ட் அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment