குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
Aegon International டென்னிஸ் போட்டித் தொடரில் செக் குடியரசுகளைச் சேர்ந்த கரோலினா பிலிஸ்கோவா வெற்றியீட்டியுள்ளார். கரோலின் வொசினியாக்கியை வீழ்த்தி கரோலினா வெற்றியீட்டியுள்ளார்.
இறுதிப் போட்டியில் 6-4 6-4 என்ற செற் கணக்ககில் கரோலினா இலகு வெற்றியீட்டியுள்ளார். இந்த வெற்றியானது கரோலினாவின் விம்பிள்டன் எதிர்பார்ப்புக்களை மேலும் வலுப்பெறச் செய்துள்ளது.
விம்பிள்டன் போட்டித் தொடரில் கரோலினா வெற்றியீட்டக்கூடிய சாத்தியம் உண்டு என விளையாட்டு விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரித்தானியாவின் முதல்தர டென்னிஸ் வீராங்கனை கொன்டா உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment