குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரபல கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸியின் ஒப்பந்த காலத்தை பார்சிலோனா கழகம் நீடித்துள்ளது. இதன்படி, மெஸி எதிர்வரும் 2021ம் ஆண்டு வரையில் பார்சிலோனா கழகம் சார்பில் போட்டிகளில் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.
30 வயதான மெஸி, தனது 13ம் வயதில் பார்சிலோனா கழகத்தில் இணைந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மெஸி தொடர்ந்தும் கழகத்தில் விளையாட இணங்கியுள்ளமை பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆர்ஜன்டீனா அணியின் நட்சத்திர வீரான மெஸி, பார்சிலோனா கழகத்தின் சார்பில் 583 போட்டிகளில் 507 கோல்களை போட்டு சாதனை படைத்துள்ளார். மெஸி, மான்செஸ்டர் சிட்டி கழகத்தின் சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
எனினும் இந்த தகவல்களை பொய்ப்பிக்கும் வகையில் மெஸி, பார்சிலோனா கழகத்தின் சார்பிலான ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார்.
Add Comment