விளையாட்டு

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சூதாட்டத்தில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டமையை தொடர்ந்து  தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் லோன்வாபோ டிசோபே ( Lonwabo Tsotsobe  ) க்கு  தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 8 ஆண்டுகள் விளையாட தடை விதித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற  உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரேம்ஸ்லாம் இருபதுக்கு இருபது  போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட முயன்றதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பில்  தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மேற்கொண்ட  விசாரணையின் போது  டிசோபே சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து, அவருக்கு 8 ஆண்டுகள் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.