இலங்கை

இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த தொழில் பயிற்சிகள் வழங்கப்படும்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த தொழில் பயிற்சிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலவச கல்வியை பலப்படுத்தும் அதேவேளை, இளைஞர் யுவதிகளின் தொழில்சார் கற்கைகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக பல்வேறு வழிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த தொழில் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களது எதிர்காலத்தை சுபீட்சமாக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap