215
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கென்யாவில் கொலரா நோயினால் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் முதல் கொலரா நோயினால் கென்யாவின் தலைநகரில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொலரா நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிரபல ஹோட்டல் மற்றும் உணவகம் ஆகியன மூடப்பட்டுள்ளன.
கென்ய தலைநகர் நைரோபியில் இதுவரையில் கொலரா நோயினால் 79 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விசேட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் அரை மில்லியன் மக்களை சோதனைக்கு உட்படுத்துமாறு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது.
Spread the love