உலகம் பிரதான செய்திகள்

இணையத்திருடர்களை தடுக்க ஏமாற்று வித்தைகளை பயன்படுத்த முடியும்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இரண்டாம் உலக யுத்தத்தின் போது எதிரிகளை தோற்கடிப்பதற்கு பல நாடுகள் ஏமாற்று வித்தைகளை பயன்படுத்தியிருந்தன. உண்மையான படை மற்றும் ஆயுத பலத்தை பெருப்பித்து காண்பித்து அதன் ஊடாக எதிரிகளின் மனோ திடத்தை சிதறச் செய்யும் யுத்த தந்திரோபாயம் பின்பற்றப்பட்டிருந்தது. அதே வழிமுறைகளைப் பயன்படுத்தி இணையத்திருடர் (hacker)களை   தோற்கடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலியான விடயங்களை உருவாக்கி வைப்பதன் மூலம் இணையத்திருடர்கள்  குழம்பிப் போகக்கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக கணனி வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

உண்மையானதைப் போன்றே போலியான கோப்புக்கள், நெட்வேர்க்குகள் உள்ளிட்டனவற்றை உருவாக்குவதன் மூலம் கணனிகள் மீது ஊடுருவி தாக்குதல் நடத்தப்படுவதனை தடுக்க முடியும் என  அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நிழல நெட்வேர்க்குகளை உருவாக்கி அடிக்கடி அவற்றை மாற்றிக் கொண்டே இருப்பதன் மூலம் இணையத்திருடர்கள் குழம்பச் செய்ய முடியும் என கணனி துறை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.