இலங்கை பிரதான செய்திகள்

நிலமெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கரைச்சி  பிரதேச செயலக பிரிவில்  நிலமெஹர ஜனாதிபதி மக்கள் சேவை இன்று ஞாயிற்றக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இன்று காலை ஆரம்பமான   நிலமெஹர ஜனாதிபதி மக்கள் சேவையில்  மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் பணிப்பின்  பேரில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின்  ஒழுங்குப்படுத்தலில் இந் நடமாடும் சேவை  நடைப்பெற்று வருகிறது.

இந் நடமாடும் சேவையில்  காலங்கடந்த பிறப்பு இறப்பு  பதிவுகளை், விவாக பதிவுகள், தேசிய அடையாள அட்டைப் பதிவுகள், சாரதி அனுமதி பத்திரம், முதியோh் அட்டை, காணி, சிறுதொழில் முயற்சி தொடர்பான அறிவுறுத்தல்கள், கடவுச் சீட்டு, வங்கிச்சேவைகள், எனபல சேவைகள் இடம்பெற்றுள்ளது.

அமைச்சுகளின் திணைக்கள அதிகாரிகள் அலுவலர்கள்  கலந்துகொண்டு மக்களுக்கு சேவைகளை வழங்கவுள்ளனா்.

இன்றைய பூநகரி நடமாடும் சேவையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா அநுராதபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் சந்திம கமகே மற்றும் மாவட்ட அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபா் சத்தியசீலன், கரைச்சி பிரதேச செயலா் கோ. நாகேஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap