உலகம்

சிம்பாப்வே முதல் பெண்மணி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க தென் ஆபிரிக்காவில் விசேட பாதுகாப்பு ஏற்பாடு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிம்பாப்வே முதல் பெண்மணி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருப்பதற்கு தென் ஆபிரிக்காவில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிம்பாப்வேயின் முதல் பெண்மணியான  கிரேஸ் முகாபேக்கு எதிராக   நாட்டின் எல்லைப் பகுதியில் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்க காவல்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிரேஸ் முகாமே, தென் ஆபிரிக்காவின் ஜொஹனர்ஸ்பேர்க்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 20 வயதான யுவதி ஒருவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகளில் முன்னிலையாகுமாறு  கிரேஸிற்கு விடுக்கப்பட்ட உத்தரவினை அவர் மீறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தென் ஆபிரிக்காவில் தங்கியுள்ள கிரேஸ் முகாபே தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சிம்பாப்வே ஜனாதிபதி ரொபர்ட் முகாபேவும் தற்போது தென் ஆபிரிக்காவில் தங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply