விளையாட்டு

இந்திய அணியின் துணைத் தலைவராக ரோஹித் சர்மா நியமனம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்திய அணியின் துணைத் தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக உள்ள ஐந்து போட்டிகளைக் கொண்டு ஒருநாள் தொடரின் துணைத் தலைவராக ரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய அணியின் சார்பில் விளையாடி வரும் ரோஹித் சர்மா, துணைத் தலைவராக முதல் தடவையாக கடமையாற்ற உள்ளார்.

துணைத்தலைவராக நியமிக்கப்பட்டமை பெரும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தாம் தலைமைத்துவ பதவி குறித்து ஒரு போதும் சிந்தித்தது கிடையாது எனவும் அணியின் சார்பில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்துவதே தமது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply