விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி  அஸ்திரேலியாவுக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.  எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடரை இந்திய அணி 4-1 என கைப்பற்றும் பட்சத்தில் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தென்னாபிரிக்கா 119 புள்ளிகளுடன் முதலிடத்தில்  உள்ளது. அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் 4-1 என வெற்றி பெற்றால்  120 புள்ளிகள் பெற்று இந்தியா முதலிடத்தை கைப்பற்றும்.  தற்போது இந்திய அணி 117 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.