குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலான் பிரச்சினை காரணமாக, ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணியின் வீரர் ஜெராட் பிக் ( Gerard Pique ) சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டலான், ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைக்கு ஜெராட் ஆதரவளித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேசிய அணிக்காக தொடர்ந்தும் விளையாட விரும்புவதாகவும் தாம் அணியில் அங்கம் வகிப்பது சர்ச்சை என தேசிய அணி நிர்வாகம் கருதினால், அணியிலிருந்து விலகிக்கொள்ள தயங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெய்னின் பெரும்பான்மையான மக்கள் தற்பொழுது நாட்டில் நடைபெற்று வருவதனை ஏற்கவில்லை எனவும் இதனை ஜனநாயகமாக கருதப்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment