குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரான்ஸ் கத்திக் குத்து தாக்குதல்களுடன் தொடர்புடைய நபர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸின் மார்செல்லிஸ் பிரதான புகையிரத நிலையத்தில் இரண்டு பெண்கள் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபரே இவ்வாறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளை களவு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் இந்த சந்தேக நபர் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வட ஆபிரிக்க தோற்றத்தையுடைய குறித்த சந்தேக நபரின் ஆள் அடையாள விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
வெள்ளிக்கிழமை கடையொன்றில் களவெடுத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போதிலும் போதியளவு ஆதாரங்கள் இன்றி பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment