குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனநாயகம் மீறப்படும் இடமாக பாராளுமன்றம் மாறியுள்ளது என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தை பாதுகாக்கும் மையமாக பாராளுமன்றம் காணப்பட வேண்டிய போதிலும், பாராளுமன்றில் ஜனநாயகம் மீறப்படுகின்றது என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றின் சுவர்களுக்கு வாய் இருந்தால் தாம் சொல்வது உண்மை என்பதனை அவை நிரூபிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த எழுபது ஆண்டுகளில் பாராளுமன்றின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய பல்வேறு செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
Spread the love
Add Comment