குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியல்லவிற்கும், தயாசிறி ஜயசேகரவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பில் இந்த முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்லவும், அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் கடுமையாக வாக்குவாதப்பட்டதாகவும் இந்த வாக்குவாதத்தின் போது ஜனாதிபதியும் ஏனைய சில அமைச்சர்களும் தலையீடு செய்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment