உலகின் மதிப்புமிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியலில் சுவிற்சலாந்தின் ரோஜர் பெடரர் முதல் இடம் வகிக்கின்றார். விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் சம்பளம் போனஸ் தவிர விளம்பர ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் போர்ப்ஸ் பத்திரிகை வீரர்களை மதிப்பீடு செய்து வரிசைப்படுத்தி வருகிறது. அந்தவகையில் போர்ப்ஸ் தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் ரோஜர் பெடரர் முதல் இடம் வகிக்கின்றார். அத்துடன் உசேன் போல்ட் 3வது இடத்திலும் கிறிஸ்டியானோ ரொனால்டோ 4-வது இடத்திலும் உள்ளனர்
பிரபல கால்பந்து வீரர் மெஸ்சியை இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி முந்தியுள்ளார். மெஸ்சி 9வது இடத்திலும் விராட் கோலி 8வது இடத்திலும் உள்ளனர்.
Spread the love
Add Comment