இலங்கை பிரதான செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்தியவரின் சாரதி அனுமதி பத்திரம் நிரந்தர தடை

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மது போதையில் வாகனம் செலுத்திய முச்சக்கர வண்டி சாரதியின் , சாரதி அனுமதி பத்திரத்தை நிரந்தமாக தடை செய்ய  ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.ரியால் உத்தரவிட்டுள்ளார்.  ஊர்காவற்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்திய குற்ற சாட்டில் முச்சக்கர வண்டி சாரதியை  காவல்துறையினர்; கைது செய்து நீதிமன்றில் நேற்று புதன் கிழமை முற்படுத்தி இருந்தனர்.

அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சாரதியின் , சாரதி அனுமதி பத்திரத்தை நிரந்தமாக தடை செய்ய உத்தரவிட்டார். அத்துடன் 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு மாத சிறை தண்டனையும் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.