குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதன் காரணமாக பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஓன்றிய நாடுகளிற்கும் இடையிலான சேவைகள் பாதிக்கப்படாது என பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் தெரிவித்துள்ளது. பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வில்லிவோல்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா வெளியேறிய பின்னர் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கும் இடையிலான சேவை தடைப்படப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஓன்றிய நாடுகளிற்கும் இடையிலான சேவை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என நான் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு சேவை தடைப்பட்டால் முழு ஐரோப்பாவும் முடங்கிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment