மன்மோகன் சிங்கை பிரதமராக்கிய தமிழக முதலமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை பாரதப் பிரதமர் என்று வாய் தடுமாறி சொல்லி மீண்டும் சர்சையில் சிக்கியுள்ளார்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மாவட்டம்தோறும் கொண்டாடிவருகின்றது. திண்டுக்கல்லில் இன்று இடம்பெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்தார்.
இதன்போது பாரதப் பிரதமர் எம்ஜிஆர்..என்று பேசிவிட்டு பின்னர் பாரத ரத்னா எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது என்றார். எம்.ஜி. ஆரை பாரதப் பிரதமராக்கிப் பேசியதனால் ஊடங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அமைச்சர் சீனிவாசன் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதேவேளை ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை என்றும் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் என்றும் பேசி கடந்த நாட்களில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்று ஜெயாடிவி, சசிகலா உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனை நடவடிக்கைள் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, “என்னது ரெய்டு நடக்கிறதா? அட நான் இப்பத்தான் தூங்கி எந்திருச்சேன். இன்னும் டிவி எதுவும் பார்க்கலையே” என்று அமைச்சர் கூறியதும் செய்தியாளர்கள் மற்றும் அமைச்சர் ஆதரவாளர்களை சிரிக்க வைத்துள்ளது.
Add Comment