குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார். நாட்டில் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இந்த உரையில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது. வரட்சி, மழை வெள்ளம், பலத்த காற்று போன்ற இயற்கையின் சீற்றத்தினால் நாட்டின் விவசாயத்துறை எதிர்நோக்கிய கடும் பாதிப்புக்கள் பற்றி பிரதமர் விளக்கம் அளிக்க உள்ளார்.
இயற்கை அனர்த்தங்களினால் அரிசி மற்றும் தேங்காய் என்பனவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளன. அரிசி, தேங்காய் என்பனவற்றின் விலை ஏற்றம் தொடர்பில் பிரதமர் நாளைய உரையில் விளக்கம் அளிக்க உள்ளார். விலை ஏற்றத்தினால் நுகர்வோர் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகளை தவிர்க்க பொருட்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக பிரதமர் நாளை பாராளுமன்றில் அறிவிக்க உள்ளார்.
Spread the love
Add Comment