விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் காதலர் தினத்தை இலக்கு வைத்து வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம வெளியான ‘கவண்’, ‘விக்ரம் வேதா’, ‘புரியாத புதிர்’, ‘கருப்பன்’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ’96’ திரைப்படம் உருவாகி வருகிறது.இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 3 வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் சி.பிரேம் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது.
இதையடுத்து காதலர் தினமான பெப்ரவரி 14ம் திகதி இப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறேன்’, ‘சீதகாதி’, ‘ஜுங்கா’ ஆகிய படங்களும் உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Add Comment