உலகம்

அஸ்பற்ரஸ் கூரைத்தகடுகளின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நீக்கம்:-


மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அஸ்பற்ரஸ் கூரைத்தகடுகளின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை, தற்காலிகமாக நீக்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஸ்யா இலங்கையின் தேயிலைக்கு விதித்த தற்காலிக தடைக்கு, அஸ்பற்ரஸ் கூரைத்தகடின் இறக்குமதி தடை காரணமாக இருந்தால் அத்தடையை தற்காலிகமாக நீக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில்  நடைபெற்ற  சந்திப்பில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட அமைச்சர் மட்டக் குழு, ரஸ்யாவுக்கு சென்று இவ்விடயம் குறித்து தெளிவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இரசாயன தாக்கம் அதிகம் உள்ள அஸ்பற்ரஸ் கூரைத்தகடுகளால் மனிதனுக்கு அபத்து உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டமையைத் தொடர்ந்து எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதன் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக ஜனாதிபதி மைத்திரி ஏற்கனவே அறிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply