உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவில் கடும்பனிப்புயல் – மூவர் பலி

அமெரிக்காவில் வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 விமான சேவைகளும் ரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன.  அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசுவதனால் டகோடா, மின்னெசோட்டா, கன்சாஸ் மற்றும் அயோவா மாகாணங்களில் வீதி மற்றும் வீடுகள் மூடப்பட்டுக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் 8 முதல் 18 அங்குலம் அளவுக்கு பனி உறைந்து காணப்படுவதன் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 5700 விமானங்கள் தாமதமாக வந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் கடும் பனிப்புயல் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.