குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் தேவைப்படுவதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் தேவைப்படுவதாக சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக இந்த வேட்பாளர்கள் கண்காணிக்கப்படுகின்றார்கள் என்று அர்த்தப்படாது என குறிப்பிட்டுள்ள அவர் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்ற வகையில் இவ்வாறு தகவல்கள் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் வேட்பாளர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment