இந்தியா பிரதான செய்திகள்

மகாராஷ்டிராவில் மாணவர்கள் சுற்றுலா சென்ற படகு விபத்து – மூவர் பலி…

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாணவர்கள் சுற்றுலா சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 மாணவர்களை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சுற்றுலா சென்ற 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் படகொன்றில் சுற்றி பார்த்துக் கொண்டிருந்த வேளை திடீரென படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு வந்த மீட்பு படையினர்32 மாணவர்களை மீட்டுள்ளதுடன் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சுற்றுலா படகில் சென்ற மாணவர்களுக்கு உயிர் காக்கும் கவசம் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் இதனாலேயே மாணவிகள் இறக்க நேர்ந்தது எனவும் விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் மும்பையில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களுடன் ஹெலிகொப்டர் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 உயிரிழந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply