உலகம் கட்டுரைகள் பிரதான செய்திகள்

அழிவை நோக்கி செல்லும் உலகம் – தவிர்க்க விஞ்ஞானிகள் தெரிவிக்கும் ஆலோசனைகள்

பருவநிலை மாற்றம், நாடுகளுக்கிடையிலான மோதல்கள் மற்றும் உலகத் தலைவர்களின் பொறுப்பின்மையால் அணு ஆயுதப் போர் உள்ளிட்டன உலகினை அழிவை நோக்கி அழைத்துச் செல்வதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.  உலக அழிவை குறிக்கும் வகையில் டூம்ஸ் டே (Doomsday Clock ) கடிகாரத்தில் ஊழிகாலத்தை 2 நிமிடங்கள் விஞ்ஞானிகள் மாற்றியமைத்துள்ளனர்.

மனித நடவடிக்கைகளால் உலகம் அழியும் நாளை குறிப்பிடும் ஊழிநாள் கடிகாரம் என அழைக்கப்படும் டூம்ஸ்டே கடிகாரம் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. உலகச் சூழலைப் பொறுத்து இந்த கடிகாரத்தின் நேரத்தை விஞ்ஞானிகள் மாற்றியமைத்து வருகின்றனர்.

1947ம் ஆண்டில் டூம்ஸ் டே கடிகாரம் அமைக்கப்பட்ட போது ஊழி காலத்திற்கு 7 நிமிடங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அது 2 நிமிடங்கள் மட்டுமே ஊழி காலத்திற்கு இருப்பதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தும் உலகப் பிரச்னைகள் தென்சீனக்கடல் பற்றிய பதற்றங்கள், பருவநிலை மாற்றங்கள், நாடுகளுக்கிடையே இடையேயான மோதல்களை விஞ்ஞானிகள் அழிவுகளாக சுட்டிக் காட்டியுள்ளனர்.

ரஷ்யா, அமெரிக்கா, வடகொரியா மற்றும் சீனா இடையேயான பிரச்னைகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அணுஆயுத போரால் அழிவு வடகொரியா அணுஅயுத ஏவுகணை சோதனையால் அமெரிக்காவிற்கு ஆத்திரமூட்டு வதனால் அணுஆயுத போரால் அழிவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் உலக அழிவில் இருந்து தப்பிக்க என்னென்ன செய்யலாம் எனவும் விஞ்ஞானிகள் குழு சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர். இதன் படி பதற்றமான சூழலை தவிர்க்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமைதியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா, ரஷ்யா அமைதிப்பேச்சு நிர்வாக ரீதியிலான நடவடிக்கை தவிர வேறு வழியிலான தொடர்பாடல் முறைக்கு அமெரிக்க அரசு வழி வகுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா கடைப்பிடிக்கும் நாடகப் போக்கை கைவிட வேண்டும் எனவும் அமெரிக்கா, ரஷ்யா அமைதிப் பேச்சு நடத்த வேண்டும் போன்ற ஆலோசனைகளை விஞ்ஞானிகள் முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply