இலங்கை பல்சுவை பிரதான செய்திகள்

நல்லூர் கந்தனில் நெற்புதிர் அறுவடை விழா

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை  விழா  இன்று காலை இடம்பெற்றது . தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும்  இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய  ஆலயத்திற்குச் சொந்தமான  மட்டுவிலில்  உள்ள வயலுக்குச் செல்வார்கள் . அந்த வயலில் அறுவடை செய்யும்  நெல்லில் இருந்து அமுது தயாரித்து  கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன .
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இப் புதிர் விழா   284  ஆவது  ஆண்டாக  இந்த வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பித்தக்கது .
படங்கள்: ஐ.சிவசாந்தன்

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers