இந்தியா பிரதான செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல் – உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் பணிப்புரை


ஜம்மு ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ள நிலையில், மாநில காவல்துறை உயர் அதிகாரியை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு நிலையை உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை ஜம்முவின் சஞ்சுவான் ராணுவ முகாமின் பின்புறம் உள்ள குடியிருப்பின் வழியாக புகுந்த தீவிரவாதிகள், துப்பாக்கி சூடு நடத்தியதில் மூன்று வீரர்கள் மற்றும் ஒரு வீரரின் மகள் என 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அப்பகுதியை ராணுவ வீரர்கள் மற்றும காவல்துறையினர்; சுற்றி வளைத்து தீவிரவாதிகளுக்கு பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளர்h.
தொடர்ந்து சண்டை நடைபெற்று வரும் நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநில காவல்துறை அதிகாhஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீவிரவாத தாக்குதல் பற்றி கேட்டறிந்ததுடன் தகுந்த நடவடிக்கையை எடுக்கும் படியும் கோரியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply