உலகம் பிரதான செய்திகள்

லண்டன் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே இரண்டாம் உலகப்போர் காலத்திற்குரிய வெடிகுண்டு…

லண்டன் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே இரண்டாம் உலகப்போர் காலத்திற்குரிய வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் விமான நிலையம் மூடப்பட்டது.  லண்டன் நகர விமான நிலையத்தின் அருகே தேம்ஸ் நதியில் உள்ள ஜோர்ஜ் வி டாக் என்ற கப்பல் கட்டும் தளத்தில் நேற்றையதினம் பணிகள் நடைபெற்றபோது போது இந்த வெடிகுண்டு காணப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு வெடிக்காத நிலையில் செற்திறனுடன் காணப்பட்டதனால் அப்பகுதியைச் சுற்றி 214 மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் மனிதர்களின் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது.  மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் நகர விமான நிலையமும் அருகில் உள்ள சில வீதிகளும் மூடப்பட்டன. மேலும் வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்கச் செய்யும் பணிகளை கடற்படை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply