சினிமா பிரதான செய்திகள்

மனைவி கணவனை மாற்றலாம் – கணவன் மனைவியை மாற்றலாம் – பிள்ளைகள் பெற்றோரை மாற்றலாமா?

நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவின் திருமண நிச்சயதார்த்தத்தில் சீதா கலந்து கொண்டுள்ளார். நடிகர் பார்த்திபன், நடிகை சீதாவின் இளைய மகள் கீர்த்தனாவுக்கும், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனும் இயக்குனருமான அக்ஷய்க்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் இடம்பெற்றது.

பார்த்திபனை விவாகரத்து செய்துவிட்ட சீதா தனது மகளின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டார். தாயும், மகளும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

கீர்த்தனாவும், அக்ஷயும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கீர்த்தனா, அக்ஷய் திருமண நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வரும் மார்ச் மாதம் 8ம் திகதி அவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது

தன் மகள் காதல் திருமணம் செய்கிறாள். அவளின் காதலை மதிக்கிறேன் என தெரிவித்துள்ள சீதா நாங்களாக பார்த்தால் கூட இப்படி ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்திருக்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply