குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தகவல்களை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஹத்துருசிங்க இதற்கு முன்னதாக பங்களாதேஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியிருந்தார். பின்னர் தற்போது இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுகின்றார். பங்களாதேஸிற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில், இந்த வெற்றிகளின் பின்னணியில் ஹத்துருசிங்க செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. வீரர்கள் மற்றும் ஆடுகளங்கள் பற்றிய உள்ளகத் தகவல்களை ஹத்துருசிங்க இலங்கை வீரர்களுக்கு வழங்கி வருவதாகவும் இதனாலேயே இலங்கை திடீரென இவ்வாறு வெற்றிப் பாதையில் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின’றமை குறிப்பிடத்தக்கது
Add Comment