குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மக்கள் புத்திசாதூரியமாக நடந்து கொள்ள வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் நிலவி வரும் பிரச்சினை குறித்து மக்கள் மதி நுட்பமாகவும் யோசனையுடனும் நடந்து கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
வன்முறைகளில் மக்கள் ஈடுபடக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ள அவர் சுதந்திரத்தின் பின்னரான முதலாவது அரசாங்கத்தைப் போன்றே சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களுடன் கூடிய இணக்கவாத அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மைய சம்பவங்கள் தொடர்பில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Add Comment