Home இலங்கை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஒன்றிணைந்த எதிரணியும் சந்திப்பு…

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஒன்றிணைந்த எதிரணியும் சந்திப்பு…

by admin

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிரணி குழுவினர் ஆகியோர், பொரளையில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டில், கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ஒன்றிணைந்த எதிரணி சார்பில் பசில் ராஜபக்ஷ, மஹிதானந்த அழுத்கமகே, வாசுதேவ நாணயகார, டலஸ் அலஹபெரும மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த் மற்றும் டிலான் பெரேரா ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கே, இக்கலந்துரையாடல் தொடர்பானக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக, மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More