இலங்கை பிரதான செய்திகள்

பலத்தை நிரூபித்தது UNP – தனித்து ஆட்சி அமைப்பதற்கு இடமளிக்கப்பட வேண்டும்…

 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கு இடமளிக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சி தனது பலத்தை நிரூபித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்த யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டாலும், ஐக்கிய தேசியக் கட்சியினால் எடுக்கப்படும் முற்போக்கான தீர்மானங்களுக்கு ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.