இந்தியா பிரதான செய்திகள்

8 சிறுமியை பாலியல் பலாத்காரம் காஷ்மீரில் 2 அமைச்சர்கள் பதவிவிலகினர்..

காஷ்மீரில் இரு அமைச்சர்கள் பதவிவிலகியுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் 8 சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மன்ச் என்ற அமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த அமைப்புக்கு பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் சந்திர பிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் முழுஆதரவு வழங்கிவருவதுடன் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் பலாத்கார வழக்கில் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் குறித்த இரு அமைச்சர்கள் இருவரும் நேற்று பதவிவிலகியுள்ளனர்.

இரு அமைச்சர்களும் தங்களது பதவிலிகல் கடிதங்களை தன்னிடம் கையளித்துள்ளதாகவும் இதுகுறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படுமென இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக தலைவர் சாத் சர்மா தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap