இலங்கை பிரதான செய்திகள்

ஐ.நா.அதிகாரிகள் மட்டக்களப்புக்குப் சென்றனர்!!

ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் கனி விக்னராஜா தலைமையிலான குழு, மட்டக்களப்பு மாவட்டச் செயலரை இன்று சந்தித்து மாவட்டத்தின் தேவைகள், கடந்த காலத் திட்டங்களையும் பார்வையிட்டது.

இந்தக் குழு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதே செயலகத்தில் மேறகொள்ளப்பட்டுள்ள இலத்திரனியல் வாடிக்கையாளர் சேவை நிலையம், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலை, மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள தர்மபுரம் மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டது.

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஜெயரஞ்சினி கணேசமூர்த்தி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மட்டக்க்ளப்பு மாவட்ட திட்ட நிபுணர் கே.பார்த்தீபன், யுனசெப் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக பிரதான றெபின்சியா பீற்றர்சன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap