இலங்கை பிரதான செய்திகள்

ஆவா குழுவின் முக்கிய குற்றவாளிக்கு விளக்க மறியல்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழுவின் முக்கிய குற்றவாளியை யாழ் காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு கொக்குவில் பிரதேசத்தில் கைதுசெய்துள்ளனர். யாழ், காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நபர், யாழ்ப்பாணத்தில் பலரை வாளால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தியவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நபரிடம் இருந்து ஆவா குழு பற்றிய முக்கிய பல தகவல்கள் கிடைத்துள்ளஎனவும் இதனடிப்படையில் மேலும் சிலரை கைதுசெய்ய விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் காபவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் யாழ் பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers