இலங்கை பிரதான செய்திகள்

எரிபொருட்களுக்கான விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு மீனவர்கள் போராட்டம்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


எரிபொருட்களுக்கான விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு மீனவர்கள் போராட்டமொன்றில் குதித்துள்ளனர். பேருவளை முதல் மன்னார் வரையிலான பகுதிகளில் மீனவர்கள் இவ்வாறு பணிப் புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். எரிபொருள் மானியமொன்றை வழங்குவதாக அரசாங்கம் உறுதிமொழி வழங்கிய போதிலும், அது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திடீரென் மண்ணெண்ணையின் விலையை பாரியளவில் உயர்த்தியதனால் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வருத்தம் வெளியிட்டுள்ளனர். மீன்பிடிக்கச் செல்லாது போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சில பகுதி மீனவர்கள் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap