இலங்கை பிரதான செய்திகள்

வட- கிழக்கிற்கு பொருத்து வீடுகள் இல்லை – நிரந்தர வீடுகளை அமைக்க அமைச்சரவை அனுமதி…

வடக்கு கிழக்கு மாகாணங்களில், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, செங்கல், மற்றும் சீமந்து உடனான பாரம்பரிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் வீடுகளை அமைப்பதற்கான ஒப்பந்தகாரர்களிடம், கேள்வி மனு கோரப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இவ்வாறான வீடுகளை அமைப்பதற்கு சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.