இலங்கை பிரதான செய்திகள்

இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்வதற்கான ஓப்பந்தம் கைச்சாத்து

இலங்கையில் இயற்கை எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் வளங்கள் தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பெற்றோலிய வளங்கள்அபிவிருத்தி செயலகத்தில் இடம்பெற்றது. இவ் ஓப்பந்தமானது உலகின் மிகப்பெரிய எரிபொருள் சேவை வழங்கும் நிறுவனமான ஸ்க்லம்பர் நிறுவனத்தின் உபநிறுவனமான ஈஸ்டன் எக்கோ டி.எப்.சீசீ நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் மற்றும் இலங்கை அரசு இடையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை அரசு சார்பாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஒப்பந்தத்தில்; கையெழுத்து இட்டுள்ளார். இந்நிகழ்வின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர்

‘இந்த உடன்படிக்கையானது எதிர்காலத்தில் எமது நாட்டிட்கு அதிக நன்மையை ஏற்படுத்தி கொடுக்கும். நீண்டகாலத்தை எடுத்த இந்த திட்டமானது இன்று சாத்தியமானதால் எமக்கு இது மிகப்பெரிய வெற்றியாகும்.  இந் ஓப்பந்தம் பத்துவருடத்துக்கு உட்டபட்டதாகும். நாங்கள் எதிர்பார்ப்பது இந்த நிறுவனத்தில் இருந்து நிபந்தனையின் கீழான பல்துறை சேவைகளையேயாகும். நாங்கள் இந்த ஒப்பந்ததம் செய்ய பலபேச்சுவார்த்தைகளின் பின்பே தீர்மானித்தோம்.

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக நாம் முன்னோக்கி செல்லலாம். இந்நிறுவனம் ஆய்வுப் பணிகளுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட எதிர் பார்த்துள்ளனர். ஆய்வுப்பணிகள் மூலம் பெறப்படும் அனைத்து தரவுகளும் அரசுக்கே சொந்தமாகும். எமது அமைச்சும் அரசும் ஒவ்வnhரு தகவல்களுக்கும் வருமானத்தை பெற்றுக்கொள்ளும். நாங்கள் பலநிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின்பே இந்த ஒப்பந்தத்திற்கு வந்தோம்.’என்றார் அமைச்சர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers