இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள் மலையகம்

மலையகத்தையும், சூறையாடும் நுண்கடன் திட்டம்!

குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக – சீலா ஜெயன்…


அண்மை காலமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இளம் பெண்களின் தற்கொலைக்கு காரணமாக அமைந்தது நுண்கடன் திட்டம் என ஊடகங்கள் மூலம் அனைவரும் அறிந்த ஒன்றே. வடக்கு கிழக்கு மாவட்டகளை போன்று மலையக பகுதிகளிலும் தற்போது பல்வேறு தனியார் நிறுவனங்கள் நுண்கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி கடன்களை வழங்குகின்றனர்.

அந்த வகையில் மலையகத்தில் குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்களை மையப்படுத்தியே நுண்கடன்கள் வழங்கப்படுகின்றது.அதில் பொருந்தோட்ட பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கே கடன் வழங்கப்படுகின்றது.பொருந்தோட்டங்களில் தொழில்புரியும் பெண்கள்,இல்லத்தரசிகள் என முக்கியமாக பெண்களை குறிவைத்து சில குழுக்களை உருவாக்கி நுண்கடன்கள் வழங்கப்படுவதோடு சில பெண்கள் இக்குழுகளை வழிநடத்துபவர்களாகவும் கடன் திட்டம் தொடர்பாக சந்தைபடுத்தல், பிரச்சாரம்  செய்பவர்களாக கூட மறை முகமாக செயற்படுகின்றனர்.

எவ்விதமான நியதிகளோ, அரச நிறுவனங்களுக்கு நிகரான சட்ட திட்டங்கள் இன்றி சுய இலாபத்தை மாத்திரம் அடிப்படையாக கொண்டு இவ்வாறான நுண்கடன்கள் வழங்கப்படுகின்றது என்பதற்கு அண்மை தற்கொலைகள் பறைச்சாற்றுகின்றன.

யாருடைய வழிகாட்டல்கள் இன்றி,ஆலோசணைகள் இன்றி,சரியான விளக்கம் இன்றி சில அற்ப தேவைகளுக்கான சிறிய தொகையினை நுண்கடன்களாக பெற்று பின் மறைமுகமாக பெருந்தெகையினை இழப்பதை நுண்கடன் பெறும் எவரும் சிந்திப்பதில்லை.விரைவாகவும் இலகுவாகவும் கிடைத்து விடுகின்றது என்பதற்காக நுண்கடன்களை பெறுவோர் அதன் விளைவுகள் பற்றி சிந்திக்க மனம் விரும்புவதில்லை.

நுண்கடன் பெற்ற ஒருவர் நிச்சயமாக நிம்மதியாகவும் திருப்திகரமாகவும் வாழ வழி வகுப்பதில்லை.மலையக பகுதிகளை பொருத்த வரையில் பொருந்தோட்டஙகளிள் தொழில் புரிவோர் அதிகம்.இவர்கள் இலக்கு வைத்து வழங்கப்படும் நுண்கடன் இவர்களின் சம்பள தினத்தையும் அடிப்படையாக கொண்டே காணப்படுகின்றது.பெரும்பாலும் மாதாமாதம் 10ம் திகதி பொருந்தோட்ட பகுதிகளில் சம்பளம் வழங்கப்படுகின்றது.11ம் திகதி நுண்கடன் வழங்கியவர்கள் வீடு தேடி வந்துவிடுவார்கள் கடனை வசூழிக்க..அன்றலய தினம் கட்டாயம் நுண்கடனின் தவணை பணத்தினை செலுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் உண்டு.

இவ்வாறு 10ம் திகதி சம்பளத்தினை பெற்று 11ம் திகதி பெருந்தொகையினை கடன் செலுத்தியபின் ஏனைய 30 நாட்களுக்கான வாழ்க்கை செலவிற்கு என்ன செய்வது? பிள்ளைகள் இருப்பின் படிப்பு செலவிற்கு என்ன செய்வது?

குழந்தைகள் இருப்பின் பால்மா,ஏனைய செலவுகளுக்கு என்ன செய்வது? இவ்வாறு யாரும் சிந்திப்பதில்லை.கணவன்மார் தொழில்புரிந்த மனைவிமார் இல்லதரசிகலாக இருப்போரும் இதைபற்றி சிந்திப்பதில்லை. வாழ்கை செலவு,வறுமானம் என்பவற்றை திட்டமிட்டு செயற்படுவது என்பது தற்காலத்தில் அவசியமான ஒன்று.ஆனால் திட்டமிடலுக்கு அப்பாற்சென்று இவ்வாறான நுண்கடன் போன்ற திட்டங்களில் அகப்படுவதனால் வாழ்கை பாதிப்படைகின்றது.சில சமயங்களிள் உயிர்பலிகளையும் காவுவாங்குகின்றன இவ்வாறான நுணகடன் திட்டங்கள்.வாழ்வின் சுகதுக்கங்களுக்காக சம்பாரித்த மக்கள் இன்று அநாவசிய விடயங்களை நிவர்த்யி செய்ய உழைக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.பலரின் சுகதுக்கங்கள் நுண்கடன்கடளிள் முடங்கியுள்ளன.

எனவே எமது மக்களை சிந்திக்கவைத்து தெளிவு பெறச்செய்வது கடமை ஆகும்.சமூக ஆர்வலர்களே, கல்விமான்களே, எழுத்தாளர்களே, ஊடகவியளாளர்களே, தலைவர்களே, புத்திஜீவிகளே, நலன்விரும்பிகளே அனைவரும் நுண்கடன் தொடர்பான விழிப்புணர்வை உங்கள் சார்ந்த மக்கள் மத்தியில் ஏற்படுத்துங்கள்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers