இலங்கை பிரதான செய்திகள்

மட்டக்களப்பு, காத்தான்குடி துப்பாக்கிச் சூட்டுக் கொலை – துப்பாக்கிதாரிகள் கைது….


மட்டக்களப்பு, காத்தான்குடி காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (08.06.18) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் இன்று காலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கொக்கட்டிச்சோலை பகுதியில் தலைமறைவாகியிருப்பதாக காவற்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை அடுத்து, குறித்த பகுதிக்கு சென்ற காவற்துறையினர் இவர்கள் மூவரையும் கைதுசெய்துள்ளதுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.