ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டியில் நாயணச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 104.5 ஓவரில் 474 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கிகெட்டுக்களையும் இழந்திருந்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 109 ஓட்டங்கை மாத்திரமே பெற்றது.இதனையடுத்து. இந்தியா தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாட விரும்பாமையினால் 2-வது இன்னிங்சை ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றயீட்டியுள்ளது
Spread the love
Add Comment