
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய்யின் 62ஆவது படத்திற்கு சர்கார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் மற்றும் சுவரொட்டி (போஸ்டர்) என்பன வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் இந்த படத்தில் பணக்காரராக நடித்திருப்பதாகவும், சமூகத்தின் முக்கிய பிரச்சனைகள் மற்றும் சமகால அரசியல் பற்றி படத்தில் அலசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேறகொள்கிறார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் இரண்டாவது சுவரொட்டியும் (போஸ்டர்) வெளியிடப்பட்டது.

Add Comment