சினிமா

நித்யா மேனன் நடித்த பிராணா பர்ஸ்ட் லுக்கிற்கு பெருகும் வரவேற்பு!


வி.கே.பிரகாஷ் இயக்கத்தில் நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் `பிராணா’ படத்தின் முதல் சுவரொட்டிக்கு (பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு) பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நித்யா மேனன் தமிழில் மாத்திரமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் பிராணா. ஒரே ஒரு கதாபாத்திரத்தை சுற்றி நடப்பதுபோல் இந்தப் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

திரில்லர் கதையைக் கொண்ட இந்த படம் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 4 மொழிகளில் தயாராகிறது. வி.கே.பிரகாஷ் இயக்கும் இதற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரசூல் பூக்குட்டி ஒலிப் பதிவு கலைஞராக பணியாற்றுகிறார்.

இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து படத் தொகுப்பு முதலிய பின் தயாரிப்பு பணிகள் (போஸ்ட் புரொடக்சன்) பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின்முதல் சுவரொட்டியை, நடிகர் துல்கர் சல்மான் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

துல்கரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓரின சேர்க்கையாளர், ஒரே ஒரு கதாபாத்திரம் என்று வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் நித்யாமேனன்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 9 other subscribers