கென்யாவில் ஜிகோம்மா எனப்படும் திறந்தவெளிச் சந்தை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை மதியம் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் நான்கு பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கென்யாவில் அண்மைக் காலமாக இனக் குழுக்களுக்கிடையே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்ற நிலையில் அங்கு கடந்த சில மாதங்களுக்குள் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
எஅந்தவகையில் இந்த தீ விபத்துக்கும் அந்தத் தொடர் வன்முறை சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Add Comment